ஈரோடு, ஜன.1: ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ். திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் எஸ். ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கல்லூரியின் முதல்வர் எஸ்.மனோகரன், நிர்வாக அதிகாரி வி.எஸ். சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் எஸ்.பானுமதி சண்முகன் குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் ஆர்.குப்புசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்பேது, அவர் எந்த மனிதனும் எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும் பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்றும், விழிப்போடு வாழ்வில் உயர தன்னம்பிக்கையே ஊன்று கோல் ஆகும் என்றும்,
இதற்கு உதாரணமாக தனது உழைப்பால் உயர்ந்து இன்று ஆலம் விருட்சமாய் திகழ்பவர் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் ஆவார் என மாணவர்களை உற்சாகப்படுத்தி பேசினார். முன்னதாக, கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோமதி சுப்பிரமணியம் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை கல்லூரியின் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
The post நந்தா கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.