தேவகோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 3 ரவுடிகள் கைது

தேவகோட்டை, அக். 16: தேவகோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தேவகோட்டை அழகாபுரி தெற்கு தெருவில் அக்.13ம் தேதி நடந்த இறுதி ஊர்வலத்தில் குடிபோதையில் சிலர் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் டூவீலரில் வந்தவரை வழிமறித்து தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக தேவகோட்டை கட்ட முருகப்பன் சந்து சபரிராஜா(21), தேவகோட்டை அருகே நல்லாங்குடி முதல் குடியிருப்பை சேர்ந்த மணி(40), தேவகோட்டை ரியாஸ் டைமன் சிட்டியை சேர்ந்த முத்துக்குமார் (31) ஆகிய 3 பேரை தேவகோட்டை டவுன் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் ரவுடி சீட்டு தொடங்கப்பட்டு காவல் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள் என தேவகோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தெரிவித்தார்.

The post தேவகோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 3 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: