×

தேடப்படும் குற்றவாளி பற்றி தகவல் அளித்தால் சன்மானம்

திருச்செங்கோடு, நவ. 14: திருச்செங்கோடு ஆண்டிபாளையம் ஊராட்சி வெற்றி நகரை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் சதீஷ் (40). கடந்த 2012ம் ஆண்டு, இவர் மீது கொலை முயற்சி வழக்கு திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் பதிவானது. விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அதனால் போலீசாரின் பரிந்துரைபடி, இவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அப்போதும், இவர் ஆஜராகவில்லை. எனவே, குற்றவியல் நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இவரை பற்றிய விபரம் கொடுப்பவருக்கு சன்மானம் அளிக்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.

The post தேடப்படும் குற்றவாளி பற்றி தகவல் அளித்தால் சன்மானம் appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Rajasekar ,Satish ,Tiruchengode Andipalayam Panchayat Vetri Nagar ,Tiruchengode ,Dinakaran ,
× RELATED மணலி ஜேடர்பாளையத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை கலெக்டர் ஆய்வு