தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி: தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை என  ஒன்றிய அரசு அளித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி, நாளை முதல் 3 தினங்களுக்கு சமூக வலைதளங்களில் டிபி.யாகவும் வீடுகளிலும் மூவர்ண கொடியை வைக்க அரசின் பல்வேறு துறைகளும் மக்களை வலியுறுத்தி உள்ளன. இதனிடையே ஹரியானா மாநிலம் ரேவாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தேசிய கொடி வலுக்கட்டாயமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்னல் மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் தேசியக்கொடி வாங்கினால் தான் உணவுப்பொருள் வழங்கப்படும் என கட்டாயப்படுத்தியதால் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து சில பெண்கள் மூவர்ண கொடிகளை கையில் ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை அடுத்து ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கொடி வாங்க நுகர்வோரை வற்புறுத்தக்கூடாது எனவும் ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. …

The post தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தரக் கூடாது என்று உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: