தென்மேற்கு பருவமழையால் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால் கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாய தேவைக்கும் தடுப்பனை மற்றும் குளம், குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் நீர்நிலைகளில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து தடுப்பணைகளில் சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விசாய நிலங்கள் பயன்பெறுகிறது. கடந்த 2021ம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து தொடர்ந்தது. அதன்பின் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மழையில்லாததால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தடுப்பனை மற்றும் குளங்களில் தண்ணீர் வற்றியது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறையத் துவங்கியதாக  விவசாயிகள் வேதனையடைந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் இறுதி முதல் சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை  தொடர்ந்திருப்பதால் வயல்வெளி மற்றும் தென்னந்தோப்புகளில் தண்ணீர் தேக்கம் அதிகமானது. பல இடங்களில் வாய்க்கால் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து அருகே உள்ள குளம், குட்டைகளை சென்றடைந்தது. அன்மையில் தொடர்ந்து பெய்த பருவமழையால் சுற்று வட்டாரத்தில் ஆர்.பொன்னாபுரம்,வடக்கிபாளையம்,செங்குட்டை பாளையம்,நெகமம்,ஆனைமலை,கோட்டூர், ஒடையகுளம்,வேட்டைகாரன்புதூர்,ஆழியார்,சமத்தூர்,கோமங்கலம்,ஜமீன்முத்தூர்  உள்பட பல கிராமங்களில் உள்ள குளம் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. பல கிராமங்களில், வறண்ட நிலையில் இருந்த குளம் மற்றும் குட்டைகளில் தற்போது மழைநீர் சேர்ந்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். …

The post தென்மேற்கு பருவமழையால் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: