தூத்துக்குடி மற்றும் திருச்சி மாநகராட்சியை கைப்பற்றிய திமுக கூட்டணி: 33 இடங்களில் வெற்றி தடத்தை பதித்தது!!!

சென்னை: தூத்துக்குடி மற்றும் திருச்சி மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த பிப்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியது. இதனைத் தொடர்ந்து,தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில்,60 வார்டுகளைக் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் 50 இடங்களை திமுக கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. ஆனால்,60 வார்டுகளில் அதிமுக வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. மேலும்,பிற கட்சிகள் நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதைப்போல,திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 இடங்களில் திமுக கூட்டணி இதுவரை 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், மாநகராட்சி:தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில்,திமுக கூட்டணி 21 மாநகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளது.ஆனால்,அதிமுக 0 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.நகராட்சி:மாநிலம் முழுவதும் மொத்தம் 138 நகராட்சிகள் உள்ள நிலையில்,129 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை.ஆனால்,அதிமுக 5 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன.பேரூராட்சி:489 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி 367 இடங்களில் முன்னிலை, அதிமுக 25, பாஜக 3, பாமக 3,அமமுக 1, பிற கட்சிகள் 35 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது….

The post தூத்துக்குடி மற்றும் திருச்சி மாநகராட்சியை கைப்பற்றிய திமுக கூட்டணி: 33 இடங்களில் வெற்றி தடத்தை பதித்தது!!! appeared first on Dinakaran.

Related Stories: