தூத்துக்குடியில் 4 இடங்களில் பேவர்பிளாக் சாலை பணிகள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி, டிச. 1: தூத்துக்குடியில் 4 இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பெரியசாமி நகரில் ₹16.20 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை, எம்எம்எஸ் காலனியில் ₹8 லட்சம் மதிப்பில் தார் சாலை, லெவஞ்சிபுரம் 2வது குறுக்கு சந்தில் ₹10.50 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை, லெவஞ்சிபுரம் 4வது குறுக்குத் தெருவில் ₹4.50 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள் சரவணன், பிரின்ஸ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, முத்துமாரி, மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், ராஜா, வட்ட செயலாளர்கள் ராஜாமணி, சுரேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பர்ட் பிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடியில் 4 இடங்களில் பேவர்பிளாக் சாலை பணிகள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: