திருவையாறில் வாகன சோதனை: லாரியில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ₹1,13 லட்சம் பறிமுதல்

 

திருவையாறு,மார்ச்20: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் நெடார் வெட்டாறு பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜீவ்பாண்டி தலைமையில் தலைமை காவலர்கள் எட்வின்பிரபு, காளிதாஸ் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த சோமன் மகன் ரெஜி (48) என்பருடைய லாரியை சோதனை செய்தபோது 1 லட்சத்து பதிமூன்றாயிரத்து எண்ணூறு பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. இந்த பணம் குறித்து அவரிடம் கேட்டபோது கும்பகோணம் பிளாஸ்டிக் ஏஜென்சியில் பர்னீச்சர்கள் இறக்கி விட்டு பணம் வசூல் செய்து வருவதாக தெரிவித்தார்.  தேர்தல் நடத்தை விதிமுறைப்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யாரும் பணம் கொண்டு செல்லக்கூடாது என்று விதி இருப்பதால் ரெஜியிடம் இருந்த ரூ.1,13,800 பணத்தை கைப்பற்றி திருவையாறு தாசில்தார் தர்மராஜிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர் அந்த பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.

 

The post திருவையாறில் வாகன சோதனை: லாரியில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ₹1,13 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: