திருமானூரில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம்

அரியலூர், ஜூன்14: அரியலூர் மாவட்டம், திருமானூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் பேசுகையில், பாதுகாக்கப்பட்ட குடிநீரை அனைவரும் உட்கொள்ள வேண்டும். கோடைகாலத்தில் வெப்பத் தாக்கம் ஏற்படாதிருக்க அதிகமான நீர் அருந்திட வேண்டும்.தங்களது வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

திறந்த வெளியினை உபயோகிக்காமல், கழிவறைகளையே உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.மருத்துவமல்லா மேற்பார்வையாளர் துரைராஜ் பேசுகையில், தொழு நோயானது, ஒரு வகை பாக்டீரியாவால் பரவுகின்றது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உணர்ச்சியற்ற சிவந்த அல்லது வெளிறிய தேமல் தோன்றலாம்.

நரம்புகள் பாதிக்கப்படலாம்.ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை மேற்கொண்டால் அங்ககீனத்தை தவிர்த்து முற்றிலுமாக குணமடையலாம். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. அனைவரும் பயன்படுத்தி நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார். முகாமில், அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

The post திருமானூரில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: