திருச்செந்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கலைஞர் வழியில் நலத்திட்டங்களை செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்செந்தூர், ஜூலை 25: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செந்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன்கள் திருச்செந்தூர் சிவ ஆனந்தி, காயல்பட்டினம் முத்து முகமது, உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, சதீஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் வரவேற்றார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகையா எம்எல்ஏ, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் வெற்றிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி ஆகியோர் பேசினர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், கலைஞர் 13 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட அருந்ததிய சமுதாய மக்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கொடுத்து அச்சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் சிறந்து விளங்க செய்தவர். மீனவ மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வந்து அவர்களையும் கல்வி வேலைவாய்ப்பில் சிறக்க வைத்தார். உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சத இடஒதுக்கீடு அளித்தார். அவர் வழியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம், புதுமை பெண்கள் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம், முதியோர் பென்சனை ரூ.1200 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை ரூ.1500 ஆகவும் உயர்த்தி உள்ளார். மேலும் அண்ணா பிறந்த நாளில் தகுதி உள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்க உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் மற்றும் பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தர் ரொட்ரிகோ, ஓடக்கரை சுகு, ஆழ்வை ஒன்றிய சேர்மன் ஜனகர், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நம்பிராஜன், வீரமணி, சுதாகர், தங்கப்பாண்டியன், கோமு, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஜெபராஜ், சாத்ராக், துணை அமைப்பாளர் முருகன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், ரேவதி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் தமிழழகன், பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுதாகர், ரேவதி, கோமதிநாயகம், ஆனந்த ராமச்சந்திரன், அமைப்புசாரா மாவட்ட துணை தலைவர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் வாள் சுடலை நன்றி கூறினார்.

The post திருச்செந்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கலைஞர் வழியில் நலத்திட்டங்களை செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: