திண்டுக்கல்லில் சிறப்பு மாநாடு

 

திண்டுக்கல், ஆக. 31: தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அருந்ததிய மக்களுக்கான 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை வரவேற்கும் விதமாக திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அருந்ததிய அமைப்பகள் சார்பாக சிறப்பு மாநாடு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் செல்லக்கண்ணு, ஆதித்தமிழர் பேரவை மாநில தலைவர் அதியமான், ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் ஜக்கையன், தமிழ் புலிகள் கட்சி மாநில தலைவர் திருவள்ளுவன் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் அரபுமுகமது நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் சிறப்பு மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: