தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

 

அவிநாசி, ஜூன் 17: அவிநாசி தாலூகா வடுகபாளையம் ஊராட்சிக்குபட்ட எஸ்பிகே நகரில் பாஸ்டர் செல்வகுமார் என்பவர் சொந்தமாக இடம் வாங்கி, கட்டிடம் கட்டி ஜெபக்கூட்டங்கள் நடத்தி வருகிறார். , இங்கு வழிபாட்டு தலம் அமைத்தது குறித்து, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகராம் தொடர்பாக நேற்று இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை அவிநாசி தாலூகா அலுவலகத்தில் தாசில்தார் சுந்தரம் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜவேல், சேவூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் வழிபாட்டுத்தலத்தில் வழிபாடு செய்வதை யாரும் தடை பண்ண கூடாது என்றும், வழிபாடு செய்பவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு பண்ணாமல் அமைதியாக தங்கள் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் தாசில்தார் சுந்தரம் அறிவுறுத்தினார். குடியிருப்பு பகுதியில் வழிபாட்டுத்தலம் அமைத்ததற்கு வடுகபாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் ஆட்சேபம் தெரிவித்து, வெளிநடப்பு செய்தனர்.

The post தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: