தன்னார்வலர்களை முன்களப் பணியாளராக அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை:  எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பரவலுக்கு எதிரான தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண திட்டங்கள் வரவேற்கத்தக்கது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தன்னார்வலர்களின் பணிகள் என்பது மிக முக்கியமானது.  கொரோனாவின் முதல் அலை தொடங்கிய கடந்த ஓராண்டாகவே தொற்றால் மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்கள், மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டது என்பதால், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலன் சார்ந்து மனிதநேயத்துடன் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களையும் தமிழக அரசு முன்களப் பணியாளர்களாக  அறிவிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் நாங்கள் வைத்த கோரிக்கைகளை அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை. எனவேஅதன்படி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்கி உரிய பாதுகாப்பும், போதிய ஊக்கத்  தொகையும் வழங்கி, அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தன்னார்வலர்களை முன்களப் பணியாளராக அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: