டெல்லி முழுவதும் உள்ள 14500 பூங்காக்களை தரிசாக பா.ஜ மாற்றி விட்டது: ஆம்ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி முழுவதும் உள்ள 14500 பூங்காக்களை பா.ஜ ஆளும் மாநகராட்சிகள் தரிசு நிலங்களாக மாற்றி விட்டது என்று ஆம்ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சிகள் பா.ஜ வசம் உள்ளன. இந்த முறை அவற்றை கைப்பற்ற டெல்லியை ஆளும் ஆம்ஆத்மி முழு முயற்சி செய்து வருகிறது. இதற்காக மாநகராட்சிகளுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. தற்போது மாநகராட்சிகள் வசம் உள்ள பூங்காக்கள் சீரழிந்துவிட்டதாக அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக ஆம்ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் நேற்று கூறியதாவது:டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் 14,500 பூங்காக்கள் தற்போது தரிசு நிலங்களாக மாறிவிட்டன. மேலும் அலட்சியம் காரணமாக காற்று மாசுவுக்கும் காரணமாக அமைந்துள்ளன. டெல்லியில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எந்த பூங்காவிலாவது பசுமை தெரிகிறதா என்று பாருங்கள். ஆனால் இந்த பூங்காக்களில் டெல்லி அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. ஆனால் நிதி செல்கிறது. பணி நடக்கவில்லை. தேசிய பசுமைத்தீர்பாயத்தின் உத்தரவுப்படி பா.ஜ மாநகராட்சிகள் இந்த பூங்காக்களுக்கு உரிய தண்ணீரை வழங்க டேங்கர் லாரிகளை வாங்கவில்லை. உத்தரவிட்டு இரண்டு வருடங்கள் கழித்தும் அதே நிலைதான் நீடிக்கிறது. மேலும் இந்த பூங்காக்களுக்கு இலவச நீரை வழங்க டெல்லி அரசு தயாராக உள்ளது. அதை பயன்படுத்தாமல் பூங்காக்கள் வறண்ட நிலையிலேயே நீடிக்க மாநகராட்சிகள் விரும்புகின்றன. இவ்வாறு அவர் புகார் தெரிவித்தார்.குடிநீர்வாரியம்தான் காரணம்டெல்லி பா.ஜ செய்தி தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் கூறியதாவது: ஆம்ஆத்மி அழுக்கு அரசியல் செய்கிறது. சவுரப் பரத்வாஜ் தவறான தகவலை மக்களிடம் பரப்புகிறார். மார்ச் 26ம் தேதி தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அளித்த புதிய உத்தரவுப்படி டெல்லியில் உள்ள அனைத்து பூங்காக்களுக்கும் டெல்லி குடிநீர்வாரியம் இலவசமாக தண்ணீர் வாஞ்க வேண்டும். மேலும் இதற்கான டேங்கர் லாரிகளை குடிநீர் வாரியம் தனது சொந்த செலவில் வாங்கி மாநகராட்சி பூங்காக்களை பராமரிக்க வேண்டியது சட்டரீதியான கடமை என்று கூறியுள்ளது. இதை எல்லாம் விட மாநகராட்சிகளுக்கு உரிய நிதியை அளித்தாலே பூங்காக்கள் உரிய முறையில் பராமரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post டெல்லி முழுவதும் உள்ள 14500 பூங்காக்களை தரிசாக பா.ஜ மாற்றி விட்டது: ஆம்ஆத்மி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: