டூவீலர் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

திருப்புத்தூர், ஆக. 8: திருப்புத்தூர் அருகே டூவீலரில் சென்ற வாலிபர் அரசு பஸ் மோதி பலியானார். திருப்புத்தூர் அருகே காரேந்தல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரய்யா மகன் அருண்குமார் (30). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்புத்தூரில் இருந்து தனது வீட்டிற்கு டூவீலரில் சென்று உள்ளார். அப்போது சிங்கம்புணரி சாலையில் காரையூர் அருகே எதிரே வந்த அரசு டவுன் பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலே பலியானார். இதுகுறித்து கண்டவராயன்பட்டி எஸ்ஐ ஸ்ரீதர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றார்.

The post டூவீலர் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: