×

சுற்றுச்சூழல் காத்த சூறாவளி; சேலம் தந்த கொள்கை தங்கம்; அடைமொழியில் ஜெ.வை மிஞ்சிய எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் விவாதங்களின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பல அடைமொழிகளை சூட்டி மகிழ்ந்தனர். 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைவதால் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த மே 29ம் தேதி முதல் நடந்து வரும் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. சட்டப்பேரவையில் விவாதங்களின் போது பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெற்றது. அதில் சில

சுற்றுச்சூழல் காத்த சூறாவளி : எம்.எல்.ஏ. ராஜா

இரும்புதேசத்தின் கரும்பு மனிதர் : எம்.எல்.ஏ. பலராமன்

சேலம் தந்த கொள்கை தங்கம் : எம்.எல்.ஏ. ராமு

சரித்திர பதிவேட்டில் சாமானிய முதல்வர் : அமைச்சர் காமராஜ்

கள்ளமில்லா சிரிப்புக்கு சொந்தக்காரர் : அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி

காலச் சரித்திரம் வழங்கிய சாமானிய முதல்வர் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

பொன் சிரிப்பில் எதிரியை ஈர்க்கும் எளிமையின் சின்னம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாடு போற்றும் நல்ல பண்பாளர் சுகாதாரத்துறை : அமைச்சர் விஜயபாஸ்கர்

தாயகம் காத்த தனிப்பெரும் தலைவன் : போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கொங்குநாடு கண்டெடுத்த தங்கம் : எம்.எல்.ஏ. பரமேஸ்வரி

எளிமையின் இலக்கணம் : அமைச்சர் செல்லூர் ராஜு

நாசகார சக்திகளின் நச்சுக்களை வீழ்த்திய கொங்கு தங்கம் : அமைச்சர் கே.சி.வீரமணி

சோதனைகளை சாதனைகளாக மாற்றும் செம்மல் : எம்.எல்.ஏ. சந்திரசேகரன்

கொங்கு சீமையின் சீதனம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இந்தியாவின் இரண்டாம் இரும்பு மனிதர் : அமைச்சர் துரைக்கண்ணு

சேலத்து மாங்கனி குடிமராமத்து நாயகன் : சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED போதைப்பொருள் நடமாட்டம் தடுக்க டிஜிபி...