டிஎஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு: முத்துப்பேட்டையில் ஒரு மாதமாக பகலில் எரியும் உயர் மின் கோபுர விளக்கு

முத்துப்பேட்டை, ஜூலை 9:முத்துப்பேட்டையில் ஒருமாதமாக பகலில் எரியும் உயர் மின் கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 18 வார்டுகளை கொண்ட ஒரு பகுதியாகும் இந்த பேரூராட்சியை பொறுத்தவரை அடிக்கடி நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பல்வேறு மக்கள் பணிகள் முடங்கி உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக முத்துப்பேட்டை பகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மின்சாரம் தட்டுப்பாடு உள்ள நிலையில் சில மாதங்களாக பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி மின் கம்பங்கள் பகலிலும் எரிந்து வருகிறது. இதில் பல மின்கம்பங்கள் பழுது காரணமாக பகலிலும் விளக்கு எரிகிறது. பல இடங்களில் ஆப் செய்யாததால் மாலை வரை எரிகிறது.

இதுகுறித்து அடிக்கடி தினகரன் நாளிதழில் சுட்டிக்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முத்துப்பேட்டை கோவிலூர் ஈசிஆர் சாலை ரவுண்டனாவில் உள்ள உயர கோபுரம் விளக்கு இரவு பகல் என் 24 மணிநேரமும் எரிந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு புகார் தெரிவித்தும் சரி செய்யவில்லை. தற்போது மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும் நிலையில் இதேபோன்று அடிக்கடி முத்துப்பேட்டை பகுதியில் வீண் விரயமாக மின்சாரம் வீணாகி வருவதை தடுக்கவும். தற்போது ஒரு மாதமாக உயர கோபுர விளக்கு 24 மணிநேரமும் எரிவதையும் சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post டிஎஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு: முத்துப்பேட்டையில் ஒரு மாதமாக பகலில் எரியும் உயர் மின் கோபுர விளக்கு appeared first on Dinakaran.

Related Stories: