பீஜிங்: கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி சீனாவில் உலக சுகாதார நிபுணர்கள் குழு நாளை மறுதினம் ஆய்வை தொடங்க உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டு, ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் தற்போது பாதிப்பின் வீரியம் சற்று குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே அதன் தோற்றம், அதன் செயல்படும் தன்மை, மனிதர்களிடம் பரவிய முறை பற்றி சீனாவில் நேரடி ஆய்வு செய்ய உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தன. இதனால், உலக சுகாதார நிறுவனம் பல முயற்சிகள் மேற்கொண்டும் இந்த ஆய்வுக்கு சீனா சம்மதிக்காமல் இருந்தது.
வுகானில் கொரோனா வைரஸ் தோன்றியது குறித்து சீனாவில் நேரடி கள ஆய்வு நாளை மறுதினம் தொடக்கம்
