ஜனாதிபதி முர்மு 8ம்தேதி ஆரோவில் வருகை

வானூர், ஆக. 4: இந்திய ஜனாதிபதி முர்மு வரும் 8ம் தேதி ஆரோவில் வருகை தருவதால் ஆட்சியர், போலீசார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 8ம்தேதி வருகிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மாத்திர் மந்திர் உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்வையிடுகிறார். ஜனாதிபதி வருகையையொட்டி மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆரோவில் செயலாளர் ஜெயந்தி, விழுப்புரம் எஸ்பி சஷாங்சாய், பாதுகாப்பு பிரிவு எஸ்பி ராஜேந்திரன் மற்றும் ஆரோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். புதுச்சேரி முதல் ஆரோவில் வரை சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஜனாதிபதி வருகையையொட்டி சுற்றுலா பயணிகள் ஆரோவில் பகுதியை சுற்றிப்பார்க்க 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post ஜனாதிபதி முர்மு 8ம்தேதி ஆரோவில் வருகை appeared first on Dinakaran.

Related Stories: