ஊட்டி அருகேயுள்ள பைக்காரா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகு சவாரி மேற்கொள்கின்றனர். ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டி - கூடலூர் சாலையில் 20 கி.மீ., தொலைவில் உள்ள பைக்காரா அணையில் கடந்த சில ஆண்டுக்கு முன் படகு சவாரியை சுற்றுலாத்துறை துவக்கியது. துவக்கத்தில் இங்கு மிதிபடகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகள் இயக்கப்பட்டன. இந்த ஆணை மிகவும் ஆழமானதாக உள்ளதாலும், எப்போதும் காற்று அதிகமாக வீசும் என்பதால், தண்ணீரில் அலையின் வேகமும் சற்று அதிகமாக காணப்படும். இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மிதி படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் இயக்குவது ரத்து செய்யப்பட்டது. தற்போது மோட்டார் படகுகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
அதேசமயம், இங்கு வேகமாக இயங்க கூடிய ஸ்பீடு போட்டுக்களும் இயக்கப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் நடுவே அமைந்துள்ள இந்த அணையில் படகு சவாரி மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பைக்காரா அணையில் படகு சவாரி: சுற்றுலா பயணிகள் ஆர்வம்
