சோமவாரத்தை முன்னிட்டு நடராஜர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சிதம்பரம், நவ. 21: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சித்சபையை சுற்றி வலம் வந்து நடராஜப்பெருமானை தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல் கோயிலுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். நடராஜரை தரிசனம் செய்த பின்னர், உள்பிரகாரம், வெளிபிரகாரத்தை வலம் வந்தனர். குறிப்பாக பெண்கள் ஏராளமானோர் வேண்டுதல் நிறைவேற கொடிமரத்துடன் சேர்த்து சித்சபையை 21 மற்றும் 108 முறை வலம் வந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நடராஜர் கோயிலுக்குள் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள், தாயாரை தரிசனம் செய்து, சிவகங்கை தீர்த்தகுளம் அருகே உள்ள சிவகாமி சுந்தரி அம்பாள் மற்றும் முருகப்பெருமானையும் தரிசனம் செய்தனர். சோமவாரத்தை முன்னிட்டு கீழ் சன்னதி, மேல சன்னதி, வடக்கு வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் அனந்தீஸ்வரர் கோயிலிலும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு கோயிலை வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே நடராஜர் கோவிலில் பக்தர்கள் குவிந்ததால் நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post சோமவாரத்தை முன்னிட்டு நடராஜர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: