சோனியா, ராகுல், பிரியங்கா ராஜினாமா?

கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அப்போது கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு, கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். அப்போது முதல் கட்சிக்கு நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதன் பிறகு, கட்சிக்கு இக்கட்டான சூழ்நிலைகள் எற்பட்ட போதெல்லாம், தலைவர் பதவியை ஏற்கும்படி ராகுலுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இப்போதும் இதை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ராகுல் அதை இன்று வரையில் உறுதியாக நிராகரித்து வருகிறார். இந்நிலையில், இன்றைய செயற்குழு கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய 3 பேருமே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், இதுபோல் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் நடந்த செயற்குழு கூட்டங்களிலும் இதுபோல் இவர்களின் ராஜினாமா முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், செயற்குழுவில் உள்ள சோனியாவின் ஆதரவாளர்களால் இது நிராகரிக்கப்பட்டு, அவர்களே பதவியில் நீடித்துள்ளனர். ஆனால், இந்த முறை அதிருப்தியாளர்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும் என்பதால், இவர்களில் யாராவது ஒருவர் தங்கள் ராஜினாமா முடிவை மாற்ற மாட்டார்கள் என்று கருதப்படுகிறது. ராகுல் காந்தி தற்போது வயநாடு தொகுதி எம்பி.யாகவே மட்டுமே இருக்கிறார். கட்சி பொறுப்புகள் எதிலும் இல்லை. காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இருக்கிறார். …

The post சோனியா, ராகுல், பிரியங்கா ராஜினாமா? appeared first on Dinakaran.

Related Stories: