கிருஷ்ணகிரி, ஏப்.28: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார், ஓசூர் சாலையில், உத்தனப்பள்ளி அருகே உள்ள புதிய மேம்பாலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். போலீசாரை கண்டதும், சிறிது தூரத்தில் காரை ஓட்டிச் சென்று நிறுத்தி விட்டு, டிரைவர் கீழே குதித்து ஓட்டம் பிடித்தார். இதையடுத்து, அந்த காரில் போலீசார் சோதனையிட்டனர்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான 425 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ரூ.2,800 மதிப்பிலான 48 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, குட்கா பொருட்களுடன் ₹4 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை போலீசார் கைப்பற்றி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post சொகுசு காரில் கடத்திய ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.
