சேலம் விஐபி பற்றி தாமரை தலைவரிடம் கொடுத்த புகார் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஒருத்தரிடம் புகார் கொடுத்தால் தவறாக இருந்தால் தண்டிக்கப்பட வேண்டும்… நல்லதாக இருந்தால் பாராட்டப்பட வேண்டும்… இது இரண்டும் இல்லாமல் மூன்றாவதாக ஒரு ஆயுதத்தை எடுத்த தலைவர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி மாஜியின் நிழலானவரு இன்கம்முக்கு அதிகமாக சொத்து சேர்த்ததா விஜிலென்ஸ் 45 இடங்களுக்கு மேல ரெய்டு செஞ்சது. அதுல வெளிநாட்டுல முதலீடு செஞ்சது கண்டுபிடிக்கப்பட்டதாம். இது தொடர்பா அவரை நேரில் அழைச்சு விசாரிக்கப் போவதா விஜிலென்ஸ் சொல்லிக்கிட்டிருந்தது. ஆனா அது திடீரென காரணமே தெரியாம நின்னுப்போச்சாம். இந்த நிலையில தாமரை கட்சி தலைவரு ஏற்காட்டுக்கு வந்திருக்காரு. அப்போது அவர் கூட்டிய கூட்டத்துல மாங்கனி மாஜியின் நிழல் குறித்து மலைவாழ் மக்கள் சில விஷயங்களை கொளுத்தி போட்டாங்க. இலைக்கட்சி ஆட்சியில இருக்கும்போது, கருமந்துறையில செக்டேம் ஒன்னு கட்டினாங்களாம். ஆனா மாஜியின் அதிகாரத்தப் பயன்படுத்தி கைக்கான்வளவுங்கிற இடத்துல டேமை கட்டி, பாப்பநாயன்கன்பட்டி பகுதிக்கு குழாய் அமைச்சிட்டாங்களாம். மாஜியின் நிழலுக்கு ஏராளமான லேண்ட் அங்க இருக்காம். அப்போ இருந்த கலெக்டரும் அவருக்கு ஆதரவா அறிக்கை கொடுத்துட்டாராம். அதுபோன்ற இயற்கையை தடுக்கும் சக்தி யாருக்குங்க இருக்கு. சுயலாபத்துக்கு செய்வதை தடுத்து நிறுத்தணும்ன்னு சொன்னாங்களாம்.இதை ஒப்புக்கு கேட்டுக்கிட்ட அந்த தலைவரு ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக்கிறேன்னு’ சொன்னாராம். இதனை கேட்ட இலை தொண்டர்கள், அவரிடம் போய் சொன்னா என்ன நடக்கும் தாமரைக்கு நாலு சீட் எக்ஸ்டிரா கொடுனு மிரட்டி கேட்பாரு… இல்லை என்றால், பாப்பநாயக்கன் பட்டி மேட்டரை சொல்லி மிரட்டுவாரு… சேலம் விவிஐபியும் வழக்குக்கு பயந்து இலை ஜெயிக்கக் கூடிய தொகுதிகளை விட்டு கொடுத்துடுவாரு… இதுக்கு மக்கள் இந்த விஷயத்தை நேரடியாக கலெக்டரிடம் சொல்லி இருந்தாலே பலன் கிடைத்து இருக்கும் என்று தொண்டர்கள் பேசிக்கினாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ மருந்துதான் கசக்கும் என்று மருத்துவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம்… ஆனால், மாவட்டமே கசக்குது என்று சொல்லி மருத்துவர்கள் உச்சக்கட்ட கோபத்தில் ஏன் இருக்காங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்டத்துல இருக்கிற மருத்துவ துறையின் உயரதிகாரி ஒருவர், மாவட்டத்துல பல மருத்துவர்கள் அலட்சியமாக நடப்பதாக மாவட்ட உயரதிகாரியின் கவனத்துக்கு கொண்டுபோனாங்க. இதனால், மருத்துவ கல்லூரியில் நேரடி விசிட் அடித்த மாவட்ட உயரதிகாரி, டாக்டர்கள் வருகை உள்பட பல நடவடிக்கைகளை கண்காணிக்க தாசில்தார்களை நியமித்தாராம். நம்மளை கண்காணிக்க வருவாய் துறைக்கு ‘பவர்’ கொடுக்க இவர் யாரு என்ற கோபத்தில் இப்போதும் இருக்காங்களாம். இது போதாதென்று, சில நாட்கள் முன்பு நடைபெற்ற ஆய்வுகூட்டத்தில், பத்மநாபபுரம் நகராட்சி மருத்துவர் ஒருவர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், மாதம் வெறும் 10 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கினாராம். அரசின் மக்கள் நலத்திட்டத்தில், அரசுக்கு அவப்பெயர் வரும் வகையில், இப்படி அலட்சியம் காட்டலாமா என பொங்கிய மாவட்ட உயரதிகாரி, குறிப்பிட்ட பகுதியில், இந்த திட்டத்திற்காக அரசு ஒதுக்கிய நிதியை சம்பந்தப்பட்ட டாக்டரிடம் வசூலிக்க சொன்னாராம். இதுபோல் மாவட்ட மருத்துவதுறை உயரதிகாரி ஒருவர், அளித்த புகாரின் பேரில் மாவட்ட ரத்தவங்கி மருத்துவருக்கும் நோட்டீசாம்.மாவட்ட உயரதிகாரி ஆய்வு கூட்டத்தில் இளம் மருத்துவர் ஒருவர், செல்போனை தடவிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அந்த உயரதிகாரி, கூட்டம் நடக்கும்போது, இப்படி மரியாதை இல்லாமல் நடக்கலாமா எனக்கேட்டாங்களாம். சம்பந்தப்பட்ட டாக்டர், போனை இடதுகையால் மாவட்ட உயரதிகாரியிடம் கொடுத்து, எனது போனை பாருங்கள். இங்கு பேசியதைதான் மொபைலில் குறிப்பெடுத்தேன் என்று கூறியுள்ளார். அதனை வாங்க மறுத்த அதிகாரி, அனுமதியின்றி மொபைலில் குறிபெடுத்தது தவறு. டைரியில் குறிக்கலாம். இங்கு பேசுவதை குறிப்பெடுக்க தடை உள்ளது. இதற்கு தனியாக அதிகாரிகள் இருக்காங்க என்று எச்சரித்தும், அவரை பணியிட மாற்றம் செய்தும் இருக்காங்க. இதனால மாவட்ட உயரதிகாரியை மாற்றியே ஆகணும்… மருத்துவம் பற்றி தெரியாதவர் மருத்துவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்கலாம்னு பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோவையில் நடந்த காமெடி கலாட்டாவை சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை திருச்சி ரோடு ராமநாதபுரம் பகுதியில் ₹253 கோடியில் 3.1 கி.மீ நீளத்திற்கு மேம்பாலம், கோவை மேட்டுப்பாளையம் ேராடு கவுண்டம்பாளையம் பகுதியில் ₹60 கோடியில் 1.5 கி.மீ நீளத்திற்கு இன்னொரு மேம்பாலம் என இரண்டு மேம்பாலம் திறப்பு விழா நடந்தது.  சென்னையில் இருந்தபடி, முதல்வர் வீடியோ கான்பரன்சிங் முறையில் இவ்விரு பாலங்களையும் திறந்துவைத்தார். இந்த திறப்பு விழாவையொட்டி மக்களுக்கு இனிப்பு வழங்கி, இப்பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்தை மின்துறை அமைச்சர் துவக்கிவைத்தார். இத்திறப்பு விழா பற்றி கேள்விப்பட்டதும், கோவையை சேர்ந்த இலைக்கட்சி எம்எல்ஏக்களில் இருவர், தாமரை கட்சியில் ஒருவர் என 3 பேர் பரபரப்புடன் சம்பவ இடத்துக்கு ஓடினாங்க. தாமரைக்கட்சி எம்எல்ஏ மட்டும் விழா நடந்த பகுதிக்கு சென்று, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால், இலைக்கட்சி எம்எல்ஏ.க்கள் இருவர் பதுங்கிக்கொண்டனர். விழா முடிந்ததும், இவர்கள் தனியாக வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு கொடுத்தாங்களாம். அப்போது, ‘ஏம்பா… எங்க கட்சி ஆட்சியில அடிக்கல் நாட்டினோம்.., இப்பாலம் கொண்டுவந்ததில் எங்களுக்கும் பங்கு உண்டு… அதனால நாங்களும் ஸ்வீட் கொடுக்கிறோம்… எங்களையும் கொஞ்சம் போட்டோ எடுங்கப்பா…’’ என அங்கிருந்த போட்டோகிராபர்களிடம் கேட்டாங்களாம்… அதை பார்த்த சிலர் சிரித்தபடியே போனாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post சேலம் விஐபி பற்றி தாமரை தலைவரிடம் கொடுத்த புகார் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: