செல்லூர் கண்மாய் ஓடைப்பாலம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

மதுரை, ஜூலை 8: செல்லூரிலிருந்து மீனாம்பாள்புரம் மற்றும் அதை சுற்றிய விரிவாக்க பகுதிகளை இணைக்கும், செல்லூர் கண்மாய் ஓடை பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செல்லூர் – குலமங்கலம் இணைப்புச் சாலையில், மீனாம்பாள்புரம் ஆலமரம் அருகே செல்லூர் கண்மாயின் ஓடைபாலம் அமைந்துள்ளது.

இப்பாலத்தின் வழியாக மீனாம்பாள்புரம், குலமங்கலம், பீபீகுளம், ஆலங்குளம், கோசாகுளம், ஆனையூர், செல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள விரிவாக்க பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்று வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பாலம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து காட்சியளிக்கிறது. பாலம் பராமரிப்பின்றி கிடப்பதால், பாலத்தை ஒட்டியும், அதன் கீழ் பகுதியிலும் மர்மநபர்கள் குப்பையை கொட்டி எரிக்கவும் செய்கின்றனர்.

இதனால், பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் சாலை பகுதி ஆகியவை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இது, பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனித்து பாலத்தை மறுசீரமைக்கவோ அல்லது இடித்துவிட்டு புதிய பாலம் கட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செல்லூர் கண்மாய் ஓடைப்பாலம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: