பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் தெரிவித்தார். இது குறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மாநிலத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை தொடங்கினோம். அதன் காரணமாக நோய் பரவல் தடுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பை ஆரம்பம் (Primary), இன்னொருவருக்கு பரவுவது (Claster), சமூகம் (community) மற்றும் தொற்று (epidamic) என்று பிரித்துள்ளனர். இதில் நமது மாநிலம் இரண்டாம் நிலை உள்ளது. அதை மூன்றாவது நிலைக்கு செல்லாமல் தடுக்கும் முயற்சியை ேமற்கொண்டு வருகிறோம்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் சுதாகர் தகவல்
