சென்னை அடுத்த பூந்தமல்லியில் மினி சரக்கு வேன் மீது தனியார் பேருந்து மோதல்: 11 பேர் காயம்

பூந்தமல்லி: சென்னையை அடுத்த பூந்தமல்லியில் விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி அருகே செம்பரபாக்கம் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து ஆவடி நோக்கி சென்ற தனியார் பேருந்து செம்பரபாக்கம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது  சாலையை கடக்க முயன்ற மினி சரக்கு வேன் மீது பலமாக மோதியது அந்த மினி சரக்கு வேன் அப்பளம் போல் முழுவதும் நொறுங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் அங்கிருந்த உயர் மின்கம்பம் மீது அந்த வேன் மோதியது. இதில் உயர் மின்கம்பம் முற்றிலும் சாய்ந்து சேதமடைந்ததது. இதனால் அங்கு போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணி மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் நடைபெற்று வருவதால் தினம் தினம் விபத்து ஏற்பட்டு வருகிறது. தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பேருந்தில் 40 பேர் வந்த நிலையில் 11 பேருக்கு இந்த விபத்தினால் காயம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சீக்கியவர்களை பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காலை நேரத்தில் ஏற்பட்ட விபத்தால் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகம் செல்லும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணி  மற்றும் மெட்ரோ ரயில் பணி ஆகியவை நடந்து வருவதால் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அறிவிப்பு பலகை எதுவும் வைக்காகத்தால் விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது என கூறியுள்ளனர்.       …

The post சென்னை அடுத்த பூந்தமல்லியில் மினி சரக்கு வேன் மீது தனியார் பேருந்து மோதல்: 11 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: