சென்னிமலையில் கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

 

சென்னிமலை, செப்.26: ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த 17ம் தேதி கிறிஸ்தவ மத போதகரான ஜான் பீட்டர் என்கிற அர்ஜுணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் ஜெப கூட்டம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் வீட்டிற்குள் ஜெப கூட்டம் நடத்தக்கூடாது எனக்கூறி தகராறி ஈடுபட்டதோடு தாக்குதலிலும் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலை பஸ் ஸ்டாண்டு முன்பாக நேற்று கிறிஸ்தவ முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ முன்னணி, இயேசுவின் நற்செய்தி இயக்கம், ஈரோடு மாவட்ட அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். அப்போது, தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும், கிறிஸ்தவ, பெந்தகொஸ்தே சபைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

The post சென்னிமலையில் கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: