செட்டிகுளம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

பாடாலூர், ஜன. 12: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். பொது சுகாதார இணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன், குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நியூட்ரிசன் இன்டர்நேஷனல் மூத்த திட்ட மேலாளர் சையதுஅகமது, நியூட்ரிசன் இன்டர்நேஷனல் உப்பு ஆலோசகர் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் ஆனந்த், பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் விஜயபிரசாத் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் பொன்னுதுரை நன்றி கூறினார்.

The post செட்டிகுளம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: