சுரண்டை அருகே வீராணத்தில் ₹13 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் ஜெயபாலன், பழனிநாடார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினர்

சுரண்டை,செப்.1: சுரண்டை அருகே வீராணத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டித்தருமாறு பொதுமக்கள் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகமது கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இதற்காக யூனியன் கவுன்சிலர் நிதியில் இருந்து ₹13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் புதிய ரேஷன் கடை கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா திமுக ஒன்றியச் செயலாளர் எம்பிஎம் அன்பழகன் தலைமையில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது முன்னிலையில் நடந்தது. இதில் பங்கேற்ற தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், பழனி நாடார் எம்எல்ஏ ஆகியோர் புதிய ரேஷன் கடை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினர்.

இதில் ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, முன்னாள் விஏஓ பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், கிளைச் செயலாளர் பாலசுப்ரமணியன், ஓட்டுநர் அணி அமானுல்லா, மாணவர் அணி ரமேஷ், விவசாய அணி முத்துராமலிங்கம், தென்காசி யூனியன் துணை தலைவர் கனகராஜ் முத்து பாண்டியன், ஒன்றிய பிரதிநிதிகள் வெள்ளத்துரை, இருதலையமருதப்பபாண்டியன், பரமசிவம், அப்துல் வகாப், மீரா உசேன், ஒன்றிய கவுன்சிலர்கள் கருவந்தா பழனி, கிருஷ்ணம்மாள் வெங்கடேஷ், வள்ளியம்மாள் முருகேசன், முருகன், சுடலை, முகமது முஸ்தபா, வெள்ளத்துரை, பாலசுப்ரமணியன், அன்சார் அலி, முருகேசன், அன்சாரி, வெள்ளத்துரை, கோமதி நாயகம், மாறன், காங்கிரஸ் வட்டார தலைவர் கணேசன், குத்தாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post சுரண்டை அருகே வீராணத்தில் ₹13 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் ஜெயபாலன், பழனிநாடார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினர் appeared first on Dinakaran.

Related Stories: