- திருச்செங்கோடு
- ஸ்வாஷ்
- இந்தியா
- நெசவு காலனி
- திருச்செங்கோடு நகராட்சி 5வது வார்டு
- நகர சபை
- ஜனாதிபதி
- நளினிசுரேஷ்பாபு
- தின மலர்
திருச்செங்கோடு, ஜூலை 27: திருச்செங்கோடு நகராட்சி 5வது வார்டில் உள்ள நெசாளர் காலனி பகுதியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சுகாதார வளாகம் கட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார். துணை தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார். பழைய சுகாதார வளாகம் சிதிலமடைந்து விட்டதால், அதனை அகற்றி விட்டு புதிய சுகாதாரவளாகம் ₹36லட்சத்தில் கட்டப்பட உள்ளது. தண்ணீர் வசதியுடன் ஆண்கள், பெண்கள் இருபாலரும் பயன் படுத்தும் வகையில், 14 அறைகள் கட்டப்பட உள்ளது. பணிகள் தொடக்க விழாவில், மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நகராட்சி பொறியாளர் சரவணன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜா, அசோக்குமார், செல்வி ராஜவேல், தாமரைச் செல்வி மணிகண்டன், செல்லம்மாள் தேவராஜன், திவ்யா வெங்கடேஸ்வரன், சண்முகவடிவு, புவனேஸ்வரி உலகநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post சுகாதார வளாகம் கட்டுமான பணி appeared first on Dinakaran.