×

ஆனங்கூர் ரயில்வே கேட் 4 மணி நேரம் மூடப்படும்

 

பள்ளிபாளையம், நவ.5: குமாரபாளையத்தில் இருந்து வெப்படை வழியாக திருச்செங்கோடு செல்லும் வழியில், ஆனங்கூரில் இரண்டு ரயில்வே கேட்டுகள் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்காக வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. பள்ளிபாளையம் வராமலேயே இந்த கேட் வழியாக திருச்செங்கோடு, நாமக்கல் நகரங்களுக்கு செல்ல எளிதாக இருப்பதால், குமாரபாளையம் மக்கள் இந்த சாலையை குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து 2 ரயில்வே கேட்டுகளும் ஒரே இடத்தில் இருப்பதால், அடிக்கடி இந்த கேட்டுகள் பழுதடைந்து வாகன போக்குவரத்து பாதிக்கிறது. இந்நிலையில், இன்று (5ம்தேதி) இந்த ரயில்வே கேட்டில் அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை, நான்கு மணிநேரம் ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் எனவும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்தும்படியும் ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

The post ஆனங்கூர் ரயில்வே கேட் 4 மணி நேரம் மூடப்படும் appeared first on Dinakaran.

Tags : Anangur Railway Gate ,Pallipalayam ,Kumarapalayam ,Tiruchengode ,Webbadi ,Anangur ,Namakkal ,
× RELATED குமாரபாளையத்தில் புத்தக கண்காட்சி