×

சிறு சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்தது தொடர்பான அறிவிப்பு வாபஸ்: நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்தது தொடர்பான அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார். கடும் எதிர்ப்பை அடுத்து வட்டி குறைப்பு அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட வட்டிக்குறைப்பு அறிவிப்பை திரும்ப பெற்றதாக நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் தகவல் அளித்துள்ளார்.ஏற்கனவே இருந்த வட்டி விகிதம் தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி சேமிப்பு, வைப்புத் தொகை திட்டங்கள், PPF, KVB, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்களுக்கு நேற்று வட்டியை குறைத்து அறிவித்த நிலையில் இன்று வாபஸ் பெறப்படுகிறது.46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பி.பி.எஃப் வட்டி விகிதத்தை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவித்தது. பி.பி.எஃப் வட்டி 7.1 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைத்து நேற்று அறிவித்தது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டியும் 0.7% குறைக்கப்பட்டு இருந்தது. அஞ்சலக சேமிப்பு திட்டத்துக்கான வட்டியும் 1.1% வரை அதிரடியாக குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பழைய வட்டி விகிதங்கள் தொடரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வட்டி குறைப்புக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மத்திய அரசு பணிந்தது….

The post சிறு சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்தது தொடர்பான அறிவிப்பு வாபஸ்: நிர்மலா சீதாராமன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Delhi ,Union Finance Minister ,Dinakaran ,
× RELATED நிதிநிலையை கருதி இலவசங்களை மாநில...