மருத்துவ குணம் கொண்ட வால்நட் பழம் சீசன் துவக்கம்

ஊட்டி: அதிக லாபம் தரும் வால்நட் பழங்கள் ஊட்டியில் பல்வேறு இடங்களில் தற்போது காய்க்க துவங்கியுள்ளது. வாதுமை கொட்டை எனப்படும் வால்நட் பழங்கள் கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்துக்களின் நல்ல ஆதாரமாக உள்ளன. இதயத்தையும் எலும்பு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கவும், எடையை நிர்வகிப்பதற்கும் மற்ற நன்மைகளுக்கும் உதவுகின்றன. வால்நட் மரங்கள் கிழக்கு வட அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். ஆனால், தற்போது சீனா, ஈரானில், கலிபோர்னியா மற்றும் அரிசோனா போன்ற நாடுகளல் இவைகள் அதிகளவு பயிரிடப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்திலும் சில இடங்களில் இந்த வால்நட் மரங்கள் காணப்படுகிறது. ஊட்டி அருகேயுள்ள வேலிவியூ, கோடப்பமந்து போன்ற பகுதிகளில் இந்த மரங்கள் காணப்படுகிறது. தற்போது இந்த பழங்களின் சீசன் என்பதால், அனைத்து மரங்களிலும் காய்த்து தொங்குகிறது. தற்போது வால்நட் பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: