சாலை பாதுகாப்புக்காக பள்ளி பகுதிகளில் வேகத்தடைகள் அமைப்பு

திருப்பூர், செப். 17: திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ் மற்றும் உதவி பொறியாளர் ரமன் கிஷோர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் உள்ள திருப்பூர் தெற்கு உட்கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள சாலைகளில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலை பாதுகாப்பின் ஒரு அங்கமாக பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை அருகே வேகத்தடைகள் அமைக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசி இரவு நேரங்களில் ஒளிரும் மின் உபகரணங்கள் பதிக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் கோட்டப் பொறியாளர் ரத்தினசாமி வழிகாட்டுதலின் படி திருப்பூர் தெற்கு கட்டுமான மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள சாலைகளில் உள்ள வேகத்தடைகளுக்கு தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சாலை பாதுகாப்புக்காக பள்ளி பகுதிகளில் வேகத்தடைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: