காற்று மாசுபாடு காரணமாக தாஜ் மகால் பாதிக்கப்பட்டு வருவகிறது- உச்சநீதிமன்றம் கவலை

டெல்லி: தாஜ் மகாலின் நிறம் மாறி வருவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக தாஜ் மகால் பாதிக்கப்பட்டு வருவதாக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தாஜ் மகால் முதலில் மஞ்சள் நிறத்தில் இருந்ததாகவும் ஆனால் தற்போது அரக்கு நிறமாகவும், பழுப்பு நிறமாகவும் மாறி வருவது கவலை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசிடம் நிபுணர்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை என்றும் இருந்தாலும் அவர்களை அரசு பயன்படுத்தி கொல்லவில்லை என்றும் அல்லது தாஜ் மகாலை பற்றி கவலைபடவில்லை என்றே தோன்றுகிறது என்றும் நீதிபதிகள் கூறினர். உள்நாட்டில் இருந்தோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ நிபுணர்களை பணி அமர்த்தி முதலில் பாதிப்புகளை ஆய்வு செய்ய அரசு நடவடிக்னை எடுக்க நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.  

Related Stories: