சாத்தூர் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்

 

சாத்தூர், மே 4: சாத்தூர் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் மெயின் ரோட்டில் சாலையின் இருபகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான காலி இடங்களில் தனி நபர்கள் கடைகள் அமைத்து பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்பால் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும் மழை காலங்களில் மழை நீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி சாலைகள் சீக்கிரமே பழுதடைந்து வாகனங்கள் செல்வதற்கு பெரும் இடையூறாக இருந்தது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க நெடுஞ்சாலை துறையினர் மேற்கண்ட சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடந்த ஏப்.25 வரை அவகாசம் வழங்கி நோட்டீஸ் கொடுத்தனர். ஆக்கிமிப்பாளர்கள் நெடுஞ்சாலை துறை அலுவலரிடம் ஆக்கிரமிப்பு அகற்றி கொள்ள கூடுதல் அவகாசம் கேட்டனர். அவர்களின் கோரிக்கை ஏற்று மே 2ம் தேதி வரை கூடுதல் அவகாசம் கொடுத்தனர். கூடுதல் அவகாசம் முடிவுற்ற நிலையில் நேற்று காலை முதல் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

The post சாத்தூர் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: