சமையல் எண்ணெய் விலையை குறைக்க ரூ.11,000 கோடியில் ஒன்றிய அரசு திட்டம்: அமைச்சரவையில் ஒப்புதல்

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடுவதை மேம்படுத்த ரூ.11 ஆயிரம் கோடியிலான தேசிய சமையல் எண்ணெய் மற்றும் பாமாயில் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. நாடு முழுவதும் சமையல் எண்ணெய், பாமாயில் விலை கடந்த ஓராண்டாக வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது.  இதற்கு காரணம், இந்தியாவின் எண்ணெய் தேவை பெரும்பாலும் இறக்குமதியையே நம்பி உள்ளதுதான் என ஒன்றிய அரசு கூறுகிறது. எனவே, சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட ரூ.11 ஆயிரம் கோடியில் தேசிய திட்டம் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி, தனது சமீபத்திய சுதந்திர தின உரையில் அறிவித்தார்.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் பயிடுவதை மேம்படுத்த, தேசிய சமையல் எண்ணெய் மற்றும் பாமாயில் திட்டத்திற்கு (என்எம்இஓ-ஓபி) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்குப் பின், ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் அளித்த பேட்டியில், ‘‘சமையல் எண்ணெய் தேவையில் பெரும்பாலும் இறக்குமதியை மட்டுமே நம்பி உள்ள நிலையில், உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக ரூ.11,040 கோடியில் தேசிய ஒன்றிய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எண்ணெய் வித்துக்களை பயிரிடும் விவசாயிகளுக்கு விலை உத்தரவாதத்தை அரசு அளிக்கும்’’ என்றனர்.இடுபொருட்களுக்கானநிதியுதவி 150% அதிகரிப்புஎண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்களுக்கான நிதியுதவி ஒரு ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.29 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து, சமையல் எண்ணெய் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.வேளாண் நிறுவனத்திற்கு ரூ.77.45 கோடிஒன்றிய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வடகிழக்கு பிராந்திய வேளாண் சந்தை நிறுவனத்தை மேம்படுத்த ரூ.77.45 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. …

The post சமையல் எண்ணெய் விலையை குறைக்க ரூ.11,000 கோடியில் ஒன்றிய அரசு திட்டம்: அமைச்சரவையில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: