சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் போது தங்க நாணயங்களை திருடிய அதிகாரி

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் புகழ் பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது, சபரிமலை சீசன் என்பதால், ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதம் இறுதியில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்றுமுன்தினம் திறக்கப்பட்ட கோயில் உண்டியலில் காணிக்கைகளை எண்ணினர். இதில் பங்கேற்ற கோயில் அதிகாரி ஒருவர், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நாணயங்களை மறைத்து எடுத்து சென்றதாக புகார் எழுந்ததால் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் சமயபுரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், சமயபுரம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது பதிவான காட்சி பதிவுகளை ஆய்வு செய்ததில், திருச்சி அடுத்த திருவெறும்பூரில் உள்ள கோயில் செயல் அலுவலர் என்பதும், உண்டியலில் பக்தர்களின் காணிக்கையாக வந்த தங்க நாணயங்களை மறைத்து எடுத்து சென்றதும் பதிவாகி இருந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் போது தங்க நாணயங்களை திருடிய அதிகாரி appeared first on Dinakaran.

Related Stories: