கோவில்பத்து ஊராட்சியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

வேதாரண்யம், ஏப்.13: தலைஞாயிறு ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு பணியாளர்களுக்கு நடைபெற்ற மருத்துவ முகாமினை நாகப்பட்டினம் கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டார். நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

முகாமில், 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பணியாளர்களுக்கு மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்ததை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பிரதிவிராஜ், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், துணை மேலாளர் தியாகராஜன், தர கட்டுப்பாடு மேலாளர் ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் அசோகன், சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கோவில்பத்து ஊராட்சியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: