கோழிகமுத்தி முகாமில் 72 வயது பெண் யானைக்கு உடல்நல குறைவு: மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை

ஆனைமலை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் பகுதியில் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இம்முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் 72 வயதான விஜயலட்சுமி என்ற பெண் யானை கடந்த 1973ம் ஆண்டு முதல் பராமரிப்பில் உள்ளது. வயது முதிர்வின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த யானைக்கு எந்த பணிகளும் அளிக்கப்படாமல், ஓய்வில் உள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே உடல் நலக்குறைவால் இருந்த இந்த யானை உணவு உட்கொள்ளாமல் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு வந்ததால், கோவை வன கால்நடை மருத்துவ குழு சார்பில், கடந்த 4 நாட்களாக விஜயலட்சுமி யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வனப்பகுதியில் யானை பலி: இதனிடையே பொள்ளாச்சி வனச்சரக உட்பட்ட சேத்துமடை சின்ன சல்ல கட்டி கொளத்தூர் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காட்டுயானை ஒன்று கீழே விழுந்து கிடப்பதை கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது, பெண் யானை என்பதும், உயிரிழந்து கிடப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவரது உத்தரவின் பேரில் இன்று கோவை வன கால்நடை மருத்துவ குழு சார்பில், யானைக்கு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post கோழிகமுத்தி முகாமில் 72 வயது பெண் யானைக்கு உடல்நல குறைவு: மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: