‘கொரோனா தொற்று வேகமெடுக்கும் காலத்தில் தமிழ்நாடுதான் மிகவும் பாதுகாப்பான இடம்’!: உ.பி. தொழிலாளர்கள் கருத்து..!!

சென்னை: கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழலில் தமிழ்நாடுதான் மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்று உத்திரப்பிரதேச மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.  உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் எம்.பி. தொகுதியான கோராக்பூரை சேர்ந்த பல்லாயிரம் கூலி தொழிலாளர்கள் சென்னை, அம்பத்தூர், அண்ணாநகர், ராமாபுரத்தில் தங்கியுள்ளனர். உத்திரபிரதேசத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தாங்கள் தமிழ்நாட்டில் தங்கியிருப்பதையே பாதுகாப்பாக கருதுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பு மிக சிறப்பாக இருப்பதே அதற்கு காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 
தமிழ்நாட்டில் தங்களது வேலைக்கான கச்சாப்பொருட்கள் தட்டுப்பாடு மட்டுமே தற்போது நிலவுவதாகவும் அதை தாண்டி தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட எந்த அவசியமும் ஏற்படவில்லை என்று உத்திரப்பிரதேச மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு தங்களுக்கு இரண்டாவது தாய் வீடு போல உள்ளதாக அவர்கள் நன்றிப்பெருக்குடன் தெரிவித்துள்ளனர். யோகி ஆதித்யநாத் தொகுதியில், 2 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமே இருப்பதால் தங்கள் குடும்பத்தினரின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

The post ‘கொரோனா தொற்று வேகமெடுக்கும் காலத்தில் தமிழ்நாடுதான் மிகவும் பாதுகாப்பான இடம்’!: உ.பி. தொழிலாளர்கள் கருத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: