கொரோனா காலத்தை, கொரோனாவை வென்ற காலமாக மாற்றியுள்ளோம்: சிறந்த மாநிலமாக தமிழகம் மாறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே தமிழக அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தொழில் முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு விரைவில் மாறும். கொரோனா காலத்தை கொரோனாவை வென்ற காலமாக மாற்றியுள்ளோம் என் அவர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உலா நட்சத்திர விடுதியில் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவானது தமிழக அரசின் தொழில்துறை சார்பாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டில் ரூ.28,664 கோடி மதிப்பிலான 47 புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மானியம் வழங்கினார். மேலும் ரூ.4,250 கோடி மதிப்பில் 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.7,117 கோடி மதிப்பிலான 5 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; தெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே எங்கள் இலக்கு. தொழில் முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு விரைவில் மாறும். கொரோனா காலத்தை கொரோனாவை வென்ற காலமாக மாற்றியுள்ளோம். தமிழக அரசின் துரிதமான செயல்பாடுகளால் கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. தொழிலை வர்த்தகமாக கருதாமல் சேவையாக எண்ணி தொழில் முதலீட்டாளர்கள் செயல்படுகின்றனர். தொழில் புரிவது எளிதாகவும் அதன் உரிய சூழலை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

The post கொரோனா காலத்தை, கொரோனாவை வென்ற காலமாக மாற்றியுள்ளோம்: சிறந்த மாநிலமாக தமிழகம் மாறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: