கொரோனாவுக்குப் பிறகு கார்பன் உமிழ்வு திடீர் அதிகரிப்பு: டெல்லியில் 30 மடங்கு அதிக வெப்பம்

புதுடெல்லி: கொரோனாவால் குறைந்திருந்த கார்பன் உமிழ்வு, தற்போது சகஜ நிலை திரும்பிய பிறகு, முந்தைய ஆண்டுகளை விட கடுமையாக அதிகரித்துள்ளதாக உலக வானிலை மையம் கவலை தெரிவித்துள்ளது. உலக பருவநிலை தொடர்பாக உலக வானிலை மையம் ‘யுனைடெட் இன் சயின்ஸ்’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பருவநிலை மாற்றம் காரணமாக டெல்லியில் வெப்பநிலை 30 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் 5 வெப்ப அலைகள் பதிவாகி, அதிகபட்ச வெப்பநிலை 49.2 டிகிரி செல்சியஸ் வரையிலும் அதிகரித்தது. இதன் காரணமாக, டெல்லி மக்கள் தொகையில் 50 சதவீதம், அதில் குறிப்பாக அடித்தட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் வானிலை தொடர்பான பேரழிவுகளின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 115 பேர் பலியாகி உள்ளனர். தினசரி ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே, 2050ம் ஆண்டில் 970 நகரங்களில் 3 மாத சராசரி வெப்ப நிலை குறைந்தபட்சம் 35 டிகிரி செல்சியசை எட்டும். கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக குறைந்திருந்த கார்பன் உமிழ்வு, தற்போது முந்தைய காலத்தை விட பலமடங்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே உலகம் முழுவதும் வழக்கத்திற்கு மாறான மழை, பெரு வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரஸ் கூறுகையில், ‘‘பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ள பாதிப்புகள் எதுவும் இயற்கையானது அல்ல. புதைபடிவ எரிபொருளுக்கு மனிதன் அடிமையானதற்கு தருகின்ற விலை அவை’’ என்றார். …

The post கொரோனாவுக்குப் பிறகு கார்பன் உமிழ்வு திடீர் அதிகரிப்பு: டெல்லியில் 30 மடங்கு அதிக வெப்பம் appeared first on Dinakaran.

Related Stories: