கைக்குறிச்சியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை, ஆக.15: புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில்கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது. இதில் ஒரு மாட்டுவண்டி சாலையோர தடுப்பில் மோதியதில் மூதாட்டி ஒருவர் காயமடைந்தார். புதுக்கோட்டை அருகே கைகுறிச்சியில் சுந்தர விநாயகர், பொற்பனை முனீஸ்வரர், சுந்தர காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில் பெரிய மாடு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில், பெரிய மாட்டிற்கு 8 கிலோ மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாட்டிற்கு இலக்காக 6 கிலோ மீட்டர் இலக்காக கொண்டு 15 மாட்டு வண்டிகளும் பந்தயத்தில் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிக்கு முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும், சின்ன மாடு பிரிவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிக்கு முதல் பரிசாக 20,000 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை கை குறிச்சி, அழகாம்பாள்புரம், பூவரசகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று கண்டு ரசித்தனர்.

மேலும் சின்ன மாட்டு வண்டி பந்தயம் தொடங்கியவுடன் ஒரு மாட்டு வண்டி சாலையோரம் பந்தயத்திற்காக அமைக்கப்பட்ட தடுப்புக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதால் மூதாட்டி ஒருவர் நிலை தடுமாறி விழுந்ததில் லேசான காயமடைந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கைக்குறிச்சியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories: