கேரளாவில் மீண்டும் ஆந்த்ராக்ஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது ஆதிரப்பள்ளி. வனப்பகுதியான இங்குள்ள அருவியை பார்த்து ரசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.  இந்த நிலையில் இங்குள்ள வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தன. இதுகுறித்து அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பன்றிகளின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் பன்றிகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பன்றிகளின் உடலில் பாசிலஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியா பரவியிருந்தது. இதையடுத்து மற்ற விலங்குகளுக்கும் ஆந்த்ராக்ஸ் பரவாமல் இருப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க கேரள சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது….

The post கேரளாவில் மீண்டும் ஆந்த்ராக்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: