கெங்கம்மாள் கோவில் பிரச்சனை இந்து அறநிலையத்துறை மூலம் தீர்வு பெற்றுக்கொள்ள முடிவு

சாத்தூர், மே 19: கெங்கம்மாள் கோயில் பிரச்சனையை அறநிலையத்துறை மூலம் தீர்த்துக் கொள்வது என சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியில் கெங்கம்மாள் கோவில் உள்ளது. இந்த கோயிலின் உள்ளே ஆந்திர மாநிலத்தின் பாப்பநுகம்மன் கோயிலுக்கு திருப்பணி செய்வதற்கு செய்யப்பட்ட சாமி சிலையை கடந்த நாற்பது நாட்களாக மக்களுக்கு தெரியாமல் வைத்து பூசாரி பூஜை செய்து வந்துள்ளார். கடந்த மே 12ம் தேதி மக்கள் சிலர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது அங்கு புதிதாக இருந்த சிலையை பார்த்து பூசாரியிடம் கேட்டபோது மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் ஊர் பெரியவர்களுக்கு தெரியவரவே அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை தொடர்ந்து சாத்தூர் தாசில்தார் வெங்கடேஷ் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில், கோவிலில் இருக்கும் நிலையே தொடர வேண்டும். கோவில் சம்பந்தமான பிரச்சினைக்கு இந்து சமய அறநிலைத்துறை மற்றும் நீதிமன்றத்தை அணுகி தீர்வு ஏற்படுத்தி கொள்வது என முடிவு செய்யப்பட்டது. சமாதான கூட்டத்தில் துணை வட்டாட்சியர் ராஜாமணி, இருக்கன்குடி காவல் நிலைய ஆய்வாளர் மயில், அப்பையநாயக்கன்பட்டி சார்பு ஆய்வாளர் ரேவதி, கோவில் கமிட்டி தலைவர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கெங்கம்மாள் கோவில் பிரச்சனை இந்து அறநிலையத்துறை மூலம் தீர்வு பெற்றுக்கொள்ள முடிவு appeared first on Dinakaran.

Related Stories: