கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து உங்களில் ஒருவளாக இருப்பேன்: வேட்பாளர் மோகனபிரியா வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு: அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் மோகனபிரியா வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக  மாவட்ட கவுன்சிலர்  பதவிக்கு  போட்டியிடும் முன்னாள் ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சல்குருவின் மகள் எஸ்.மோகனப்ரியா, மேலமையூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பூரணியம்மாள் செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக காட்டாங்கொளத்தூர்  முன்னாள் ஒன்றிய குழு தலைவரும், அதிகம ஒன்றிய செயலாளருமான சம்பத்குமார், இரட்டை இலை சின்னத்துக்கு மேலமையூர், என்ஜிஓ நகர், ஆலப்பாக்கம் சக்திநகர், வல்லம் ஆகிய பகுதிகளில்  வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார்.அப்போது, வேட்பாளர் மோகனபிரியா, ஏற்கனவே எனது தந்தை சல்குரு, பொதுமக்களுக்கு நிறைய திட்டங்களை செய்துள்ளார். என்னை வெற்றிபெற செய்தால்,  அவரைப்போல நானும் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து உங்களில் ஒருவராக நிற்பேன். உங்களது  அனைத்து கோரிக்கைகளையும்  நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு, பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பளித்தனர். அதிமுக வேட்பாளர்  மோகனப்ரியா   மாவட்டத்திலேயே படித்த இளம் வேட்பாளராக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இந்த பிரசாரத்தில் அதிமுக புரட்சிபாரதம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் உள்பட  பலர் கலந்துகொண்டனர்….

The post கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து உங்களில் ஒருவளாக இருப்பேன்: வேட்பாளர் மோகனபிரியா வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: