கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிட தேர்வுக்கு இணைய தளத்தில் நுழைவு சீட்டு: இணை பதிவாளர் தகவல்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிட தேர்வுக்கான நுழைவு சீட்டை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான ஜெயஸ்ரீ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையவழியின் மூலம் பெறப்பட்டுள்ளன.

இதில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 25ம்தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை காஞ்சிபுரம் திருமலை பொறியியல் கல்லூரி மற்றும் திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. இத்தேர்வுக்கான அனுமதி சீட்டினை, விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதள முகவரியான www.drbkpm.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், கூடுதல் விபரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை 90430 46100 என்ற தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிட தேர்வுக்கு இணைய தளத்தில் நுழைவு சீட்டு: இணை பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: