கூடலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 40 பேர் கைது

 

கூடலூர், அக்.2: சென்னை தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூரில் சாலை மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்தினர் 40 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலைப்பளுவை குறைத்தல், சம்பள உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நேற்று நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கூடலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வாசு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கொடிகளை ஏந்தி கோஷமிட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் போலீசார், 40 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post கூடலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 40 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: